புதுச்சேரி மாநில கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் சார்பாக அகில இந்திய கூடோ பெடரேஷன் ஆதரவுடன் மாநில அளவிலான கூடோ பயிற்சி முகாம் முத்தியால்பேட்டை ஆறுமுகம் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமிற்கு புதுச்சேரி மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சந்தோஷ்குமார் முன்னிலை வவகித்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். கௌரவ விருந்தினராக உருளையன்பேட்டை காவல் ஆய்வாளர் கிட்டா சத்யநாராயணா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதில் உலக அளவிலான கூடோ சங்க பயிற்சியாளர்கள் ஜாஸ்மின் மகானா மற்றும் பயிற்சி முகாம் பொறுப்பாளர் பிரியங் ரான ஆகியோர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கூடோ பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் சீனியர் பயிற்சியாளர்கள் பாலச்சந்தர், ஆறுமுகம், செல்வம், வெங்கடாஜலபதி, வெங்கடேஷ், செந்தில் வேல், முருகன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர், கூடோ ஒரு தற்காப்பு கலை பயிற்சி என்றும், இதை கற்றுகொள்ள வயது தடையில்லை. அதிக வயது உள்ளவர்களும் கற்றுகொள்ளலாம். தற்காப்பு மட்டுமல்லாமல், ஙேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதாக கூறினார்.