புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியம் நிரவி பகுதியில் உள்ள பாரதிதாசன் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 54 பேர் ஆசிரியர்களுடன் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வை காண வந்தனர். அந்த மாணவர்கள் சட்டப்பேரவை பார்வையாளர் அரங்கில் அமர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
அந்த மாணவர்களுக்கு பேரவையில் சபாநாயகர் உள்பட உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.