புதுச்சேரி, முருங்கப்பாக்கம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் பிரம்மோற்சவ விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் சுவாமி உள்புறப்பாடு மற்றும் வீதியுலா நடைபெற்று வந்தன. மேலும் இவ்வாலயத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பல் தெப்பல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ திரெளபதி-அர்ஜுனன் ஆகிய சாமிகள் வீதி உலாவாக அரியாங்குப்பம் ஆற்றங்கரைக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கிரன் மூலம் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தொப்பலில் வைக்கப்பட்டு தெப்பல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள், ஊர் மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
பொதுவாக தெப்பல் உற்சவம் ஆலய குளங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தின் தெப்பல் உற்சவம் ஆற்றில் நடைபெற்றது.