ஸ்ரீ புத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பூஜை ஆரம்பம்

82பார்த்தது
புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலை வரதப்பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புத்து மாரியம்மன் திருக்கோயில் வினோதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமம் கோபூஜை நவக்கிரக ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து தொடர்ந்து மாலையில் ஸ்ரீ மகா கணபதி பூஜை வாஸ்து சாந்தி கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல் கால யாக பூஜை ஆரம்பமானது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை மூன்றாம் கால யாக பூஜை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளன விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விமான கோபுரம் மகா கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ புத்து மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி