புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு சுத்துக்கேணி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயில் ராஜகோபுரம் பணிக்கான வாசக்கால் வைப்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலுக்காக முதல் தவனையாக அமைச்சர் நமச்சிவாயம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்தை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.