மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றம்

171பார்த்தது
மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றம்
புதுவை மாநில தி. மு. க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி

எம். எல். ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: -

 புதுச்சேரி மாநிலம் முன் எப்போதும் இல்லாத வகையில் பல நெருக்கடி களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் நிலவுகின்ற பல்வேறு முக்கியமான பிரச்சினைகளை உடனுக் குடன் தீர்ப்பதற்கு நமக்கு நிதி அதிகாரமும், நிர்வாக அதிகாரமும் இல்லை. இதனை உணர்ந்துதான் மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி நமது மாநிலத்திற்கு முழு அதி காரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொட ரின்போது சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் 14-வது முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் ஒரு மனதாக நிறை வேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தை கவர்னர் காலம் கடந்து அனுப்பி வைத்தார். இந்த நிலையில் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது. இது புதுச்சேரி மாநில மக்களை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி