புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்த கூட்டத்தொடரை நடத்த கூடாது. அவரது அருக்கையில் இருந்து வரை கீழே இறங்க வேண்டும் என கூறி சுயேட்சை எம். எல். ஏ நேரு சபாநாயகர் முன்பு நின்று சபாநாயகர் டவுண் டவுண் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது எதிர்கட்சி தலைவர் சிவா எழுந்து நின்று எங்களை பேச அனுமதி அளியுங்கள் அல்லது இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கொடுங்கள் என பேசினார்.
அப்போது சபாநாயகர் செல்வம், உறுப்பினர் நேருவை குண்டுகட்டாக சபையில் இருந்து வெளியேற்றுங்கள் என உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த கூட்டத்தொடர் முழுவதும் சுயேட்சை எம்எல்ஏ நேரு பங்கேற்க தடை விதிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து சபை காவலர்கள் சுயேட்சை எம். எல். ஏ நேருவை சபையில் இருந்து வெளியேற்றினர்.