புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

76பார்த்தது
புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரியில் மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இன்று திறக்கப்பட்டது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். தொடக்கப்பள்ளி பயிலும் மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்கவும் ஒருசில அரசு பள்ளிகளில் மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி