இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தர்வல்லபாய்படேல் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் அரசு சார்பில் தேசிய ஒற்றுமை தினம் கடற்கரை காந்தி திடலில் அனுசரிக்கப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய்பட்டேல் படத்துக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்தாதன் வாசிக்க அனைவரும் ஏற்றனர். இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் லஷ்மிநாராயணன், சாய் சரவணன் குமார், காவல்துறை தலைவர்கள் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரங்கள் துறை ஊழியர்கள், அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.