விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்தால் ரூ. 1. 50 லட்சம் உடனடியாக வழங்கும் சேவையினை பிரதமர் மோடி துவக்கியுள்ளார். இந்த திட்டம் மிகவும் வரவேற்க்கத்தக்கது. இதில் தலையில் அடிபட்டாலும், ஸ்பைனல் கார்டு அடிபட்டாலும் புதுச்சேரியில் சிகிச்சை பெற முடியாமல் சென்னைக்கு போக வேண்டிய சூழல் உள்ளது. ஒருவாரத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதற்கு கூடுதல் செலவாகிறது. எனவே பிரதமர் திட்டத்துடன் புதுச்சேரி அரசு நிதியாக ரூ. 1. 50 லட்சம் சேர்த்து ரூ. 3 லட்சமாக அரசு வழங்கும் என முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் அறிவித்தார்.
விபத்தால் பாதிக்கப்படும் அனைவருக்கும் பாகுபாடின்றி இந்த நிதியுதவி வழங்கப்படும்.