மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிக்கு ரூ. 1000

69பார்த்தது
புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் புதுச்சேரியில் 21 வயது பூர்த்தியடைந்து 55 வயது மிகாமல் இருக்கும் அரசின் எவ்விதமான மாதாந்திர உதவி தொகையும் பெறாத வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதி ரூ. 2500-ஆக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்தார் இதற்கு ரூ. 786. 56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடும்பத் தலைவி நிதி உதவி திட்டத்தின் கீழ் தற்போது வரை 56, 000 பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பட்ஜெட் உரை மீது உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்தார்.

அப்போது அவர், சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான சேதராப்பட்டு நிலத்தில் தொழிற்பேட்டை விரைவில் அமையும் என்றும், மஞ்சள் குடும்ப அட்டை வைத்துள்ள வறுமைகோட்டிற்கு மேல் வாழும் குடும்ப தலைவிக்கும் மாத உதவி தொகை வழங்க உறுப்பினர்கள் கூறியதை தொடர்ந்து அவர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதே போல் ரொட்டிபால் ஊழியர்களுக்கு எம். டி. எஸ் ஆக மாற்றி மாதம் ரூ. 18, 000 ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி