ஆப்ரேஷன் செந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து தீவிராதிகளின் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தேச ஒற்றுமயை வலியுறுத்தும் விதமாக ராயல் சல்யூட் பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது. நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் தலைமையில் புறப்பட்ட ராயல் சல்யூட் பேரணியை இந்திய ஜனநாயக கட்சி துணை பொதுச்செயலாளரும், மார்ட்டின் குழும இயக்குநருமான லீமா ரோஸ் மார்ட்டின், மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சிலம்பாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, மானாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடன கலைஞர்களுடன், 100 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கையில் பிடித்துக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துடன் பேரணியாக சென்றனர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து புறப்பட்ட பேரணியானது லெனின் வீதி சாரம், காமராஜர் சாலை, 45 அடி சாலை, வழியாக காமராஜர் நகர் தொகுதி வெங்கடா நகர் பூங்கா அருகே நிறைவு அடைந்தது, பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசங்கரன், கல்யாணசுந்தரம், அங்காளன், ரிச்சர்ட் ஜான் குமார், உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்கள் பங்கேற்றனர்.