PWD பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சவப்பாடை போராட்டம்

69பார்த்தது
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளைபுறமாக பணியமர்த்தப்பட்டதாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ. 18000 சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் இதுவரை அரசு அவர்களுக்கு பணி வழங்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் பணி வழங்க வேண்டும், இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என கோரி பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பணி வழங்கப்படும் என அரசாணை வெளியிட வலியுறுத்தி சவப்பாடையில் ஊழியர் ஒருவர் படுத்தபடி அவருக்கு மாலை அணிவித்து தாரை தப்பட்டை அடித்தபடி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென போராட்டகாரர்கள் சவப்பாடையை தூக்கியபடி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைடுத்து சவப்பாடையை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி