திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த புதுவை எம். பி வைத்திலிங்கம்

1524பார்த்தது
தமிழ்நாடு முதல்வர், கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களை புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்கள் திமுக மாநில அமைப்பாளர் சிவா அவர்கள் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பின்போது, தமிழக அமைச்சர்கள் க. பொன்முடி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி, திமுக அவைத் தலைவர் எஸ். பி. சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், எம். வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொரடா அனந்தராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ. வி. சுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் தேவதாசு, திமுக தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், ப. வடிவேல், சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் நவீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி