செல்போன் செயலி மூலம் கல்வி தகுதியை பதிய புதுவை அரசு ஏற்பாடு

72பார்த்தது
செல்போன் செயலி மூலம் கல்வி தகுதியை பதிய புதுவை அரசு ஏற்பாடு
புதுச்சேரி தொழிலாளர் துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுச்சேரி வேலைவாய்ப்பகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவு செய்வதில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், அவர்களின் நலன் கருதியும் கல்வித்துறையில் சான்றிதழ்கள் பெறப்பட்டு தேசிய தகவல் தொழில்நுட்ப மைய உதவியுடன் செல்போன் செயலி உதவியுடன் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 10-ம் வகுப்பு அசல் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம். கல்வி தகுதியை செல்போன் செயலி மூலம் பதிவு செய்யும் முறை குறித்து தொழிலாளர் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி வரும் 29-ந் தேதி வரை செயல்படும். இதில் கல்வி தகுதியை பதிவு செய்து வேலைவாயப்பு, அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியில் பிராந்தியம், 7 இலக்க பதிவெண், பிறந்ததேதி இதர விபரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி