மத்திய திட்டங்களுக்கு புதுவை அரசு முழு ஆதரவு அளிக்கிறது

145பார்த்தது
மத்திய திட்டங்களுக்கு புதுவை அரசு முழு ஆதரவு அளிக்கிறது
புதுவையில் மத்திய அரசு திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறினார். புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சாகர் பரிக்ரமா 9-வது பயணத்திட்டம், மீன வர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடந்தது.  விழாவுக்கு முதல்-அமைச் சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். விழாவில் மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி புருஷோத்தம் ரூபலா, கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், இணை மந்திரி எல். முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மீனவர்களுக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் அட்டைகளையும் வழங்கினர். இதைத் தொடர்ந்து மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா பேசியதாவது: - அரவிந்தர் வாழ்ந்த பூமிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்தியில் பா. ஜ. க. ஆட்சி அமைந்தவுடன் பிரதமர் மோடி மீன்வளத்திற்கு தனியாக அமைச்சகத்தை உருவாக்கி அதிக நிதியையும் ஒதுக்கி, திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் கண்காணிக்கவும் அறிவுறுத்த யுள்ளார். அதன்படி சாகர் பரிக்ரமா திட்டத்தின் கீழ் மீனவர்கள் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி