கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முத்து (32) என்ற தொழிலாளி ஜனவரி 8 அன்று புதுச்சேரி சித்தரிக்கரை பகுதியில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிலருடன் ஏற்பட்ட தகராறில் முத்து பலமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (ஜனவரி 10) மரணமடைந்த நிலையில் இது தொடர்பாக ரஞ்சித், ராஜேஷ், ஆனந்த்ராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.