மன்மோகன் சிங் படத்திற்கு புதுவை சபாநாயகர், அமைச்சர் அஞ்சலி

74பார்த்தது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (டிச.26) இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மேலும் புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள மேரி கட்டிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங்கின் படத்திற்கு சபாநாயகர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் லஷ்மிகாந்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

அவர்களை தொடர்ந்து திமுக சார்பில் மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சேவை தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மன்மோகன் சிங் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி