புதுவை பி. ஆர். டி. சி. பேருந்தின் மீது கல்வீசி தாக்கியவர் கைது

80பார்த்தது
புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பி. ஆர். டி. சி. பேருந்து வீராம்பட்டினம் புறப்பட்டு சென்றது. அப்போது பேருந்தின் பின்னால் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த வாலிபருக்கு பேருந்து வழி விடவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பேருந்தின் முன்னாள் சென்று இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேருந்தை வழிமறித்துள்ளார். பின்னர் பேருந்தின் ஒட்டுனரை தகாத வார்த்தைகளால் திட்டி கல்லை எடுத்து கண்ணாடியை உடைத்துள்ளார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு புதுவை முதலியார்பேட்டை காவல் நிலையம் சென்றது. அங்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பேருந்தின் மீது கல் எறிந்த வாலிபர் திண்டிவனத்தை சேர்ந்த விக்னேஷ் என்பதும், முதலியார்பேட்டை பகுதியில் தங்கியிருந்து இறைச்சி கடையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி