சீமான் மீது புதுவை திமுகவினர் காவல் துறையில் புகார்

81பார்த்தது
தந்தை பெரியார் பற்றி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நூற்றுக்குங மேற்பட்ட திமுகவினர் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணனை சந்தித்து புகார் மனு அளித்தனர். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாநில அமைப்பாளர் சிவா, சீமானுக்கு சேர வேண்டிய தொகைகளை பெற்றுக்கொண்டு தந்தை பெரியார் பற்றி அவதூறாக பேசி வருவதாகவும் இன்று தமிழன் தலைநிமிர்ந்து இருப்பதற்கு பெரியாரின் கருத்துகளும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி