பேரறிஞர்" அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய புதுவை முதல்வர்

61பார்த்தது
பேரறிஞர்" அண்ணா அவர்களின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஒதியஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும்‌ நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, அரசு கொறடா A. K. D ஆறுமுகம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி