புதுச்சேரியில் சில நாட்களுக்கு முன்பு தனியார் மதுக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில் போலீசார் திருச்சியை சேர்ந்த சச்சின் (24) மற்றும் 2 சிறுவர்களை நேற்று முன்தினம் (ஜனவரி 9) கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.