புதுச்சேரியில் பரபரப்பாக காணப்படும் காமராஜர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கை கள்ளச்சாவி போட்டு ஒருவர் எந்தவிதமான பதட்டமும் இன்றி திருடிச் சென்றுள்ளார். அந்த இடத்தில் வரிசையாக பைக்குகள் நின்று கொண்டிருந்த நிலையில் அதில் ஒரு பைக்கை மட்டும் குறிவைத்து அவர் திருடியுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.