புதுவை அங்கன்வாடி ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் போராட்டம்

76பார்த்தது
புதுச்சேரியில் அங்கன்வாடியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஓய்வு பெற்ற ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு இதுவரை அவர்களுக்கு ஓய்வு பெற்றதற்கான பணிக்கொடையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையை வழங்காத புதுச்சேரி அரசை கண்டித்து ஓய்வு பெற்றோர் அங்கன்வாடி ஊழியர்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாதா கோவில் அருகே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சட்டசபையை முற்றுகையிட மாதா கோவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்ற நோக்கி வந்தனர்.

அவர்களை போலீசார் தடுப்பு கட்டை அமைத்து சட்டமன்றம் அருகே தடுத்து நிறுத்தினர இதனை அடுத்து அங்கேயே அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி