எடப்பாடியார் நலமுடன் இருக்க புதுவை அதிமுகவினர் சிறப்பு பூஜை

76பார்த்தது
தமிழக முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா முன்னிட்டு அவர் நீடூழி வாழ வேண்டியும், இந்தியா நாட்டின் மக்களுக்காக தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், நம் நாட்டின் எல்லையில் போர் புரியும் இராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், போரில் வெற்றி பெற்றிட புதுச்சேரியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தும், 1008 தேங்காய் உடைத்தும் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி ரயில் நிலையம் எதிரியே உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள்ள மௌலா சாகிப் தர்காவில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் இந்திய ராணுவம் நலமுடனும் வெற்றியடையும் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி