முதலமைச்சரை சந்தித்து புதுச்சேரி அதிமுகவினர் மனு அளித்தனர்.

53பார்த்தது
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாநில ஒதுக்கீட்டில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியல் அமைப்பு சட்டப்படி அனுமதிக்க முடியாது என்றும், மாநில ஒதுக்கீட்டில் வரும் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களை நீட் தேர்வு தேர்ச்சியை தகுதியாக கொண்டே அகில இந்திய அளவில் நிரப்ப வேண்டும் என கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், மருத்துவ முதல்நிலைப் படிப்பில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மாநிலத்தில் வசிக்கும் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் நம் மாநிலத்தில் வசிக்காத பிற மாநில மாணவர்களுக்கு கிடைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழி வகை செய்துள்ளது எனவே உடனடியாக புதுச்சேரி அரசு தாமதிக்காமல் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி