புதுச்சேரி மாநிலம் திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலுக்காரிப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியில் 2024-2025 கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவில் திருபுவனைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்விழாவிற்கு பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் சிறப்புரையாற்றும் போது மாணவர்கள் அனைவரும் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், உங்களுக்கு தேவைப்படும் அனைத்து தேவைகளையும் நாங்கள் செய்த தர தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார். இவ்விழாவின் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு இவ்வாண்டிற்க்கான பாட புத்தகங்கள், விளையாட்டு சீருடைகள், ஐடி கார்டு, டைரி, கலரிங் புக், நோட்டு புத்தகம், காலணிகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் , மற்றும் எழுதுபொருள் பொருட்கள் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொறுப்பு ஆசிரியர்கள் மீரா, சுதா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.