ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்தும், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் SDPI கட்சி புதுச்சேரி மாவட்டம் சார்பாக அண்ணா சிலை அருகே சட்ட நகல் எரிப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் முகமது பாரூக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் பரகத்துல்லாஹ், துணைத் தலைவர் அனிபா, செயலாளர் ரவிக் மன்சூர், பொருளாளர் முகமது காசிம், மாநில பேச்சாளர் புதுவை அப்துல்லாஹ்,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் சாகுல் அமீத், நெல்லித்தோப்பு தொகுதி துணை தலைவர் ஜோசப், மற்றும் நிர்வாகிகள் அகமது சாலிக், முகமது கவுஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வக்ஃபு சட்ட நகலை எரித்து சட்ட மசோதாவிற்கு எதிராக தங்களுடைய கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.