புதுச்சேரி ஜிப்மர் இயக்குனராக பணியாற்றிய டாக்டர் ராகேஷ் அகர்வால் நேற்று முன்தினம் பணி ஓய்வுபெற்றார். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவுக்கு இணங்க நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படும் வரை ஜிப்மரின் மூத்த பேராசிரியர் டாக்டர் கவுதம் ராய் இயக்குனராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பினை ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.