பிரதமர் மோடியின் 114-வது மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது

60பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடியின் 114 வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று பாஜக நகர மாவட்டத்தின் சார்பில் ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட எஸ் வி பட்டேல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராஜ் பவன் தொகுதி பாஜக தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மனதின் குரல் நிகழ்ச்சியின் மாநில பொறுப்பாளரும் பாஜக மாநில செயலாளருமான வெற்றிச்செல்வன் மற்றும் ராஜ்பவன் தொகுதியின் பாஜக பொறுப்பாளர் ஆனந்த கண்ணன் மற்றும் ஓ பி சி அணியின் மாநில பொருளாளர் சீனிவாச பெருமாள் முன்னாள் நகர மாவட்ட தலைவர் மூர்த்தி பாஜக நகர மாவட்ட துணைத் தலைவர் ஆனந்த பாஸ்கர் முன்னாள் எஸ்சி அனி நகர மாவட்ட தலைவர் வெற்றிவேலன் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் ராஜ்பவன் மற்றும் நகர மாவட்டச் சேர்ந்த நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி