புதுச்சேரி சாரத்தில் உள்ள எஸ். ஆர். சுப்பிரமணியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளையொட்டிக் மாணவர்களுக்கான கோலப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் உழவர்களை சிறப்பிக்கும் பாடல்களையும், கவிதைகளையும், உரைகளையும் மாணவர்கள் வழங்கினர். விழாவிற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் அனிதா தலைமை தாங்கினார். இதில் பள்ளி வளாகத்தில் மண்பானையில் தமிழர் பாரம்பரியபடி பொங்கலிட்டு அனைவரும் பொங்கலொ, பொங்கல் என கூறியவாறு பொங்கல் விழாவை மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடினர். இதில் பொறுப்பாசிரியர் லஷ்மிபிரியா, ஆசிரியர்கள் அய்யாவு அனுராதா, ஜெயலஷ்மி, மல்லிகா, கீதா, பவுலின் மேரி, காண்டீபன், சந்திரசேகரன், ஆரோக்கிய மரி ஸ்டெல்லா மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.