காவல்துறையில் ரூ. 1 கோடியில் உலகத்தரம் வாய்ந்த ஜிம் திறப்பு

82பார்த்தது
புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் உடல் நலம் மிக்கவர்களாக விளங்க வேண்டும் என்பது முதலமைச்சர் ரங்கசாமியின் விருப்பம். இதற்காக காவல்துறைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கோரிமேட்டியில் உள்ள காவலர் விளையாட்டு மைதானம் அருகே தனி ஜிம்மை உருவாக்கியுள்ளார். இதனை முதல் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா ஆறுமுகம், டி. ஜி. பி ஸ்ரீநிவாஸ், ஐ. ஜி. , அஜித்குமார் சிங்லா, எஸ். பிக்கள் உட்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி