புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி பொதுத்தேர்வு நடைபெறும் தினங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டி சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டி ஆலயத்தில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது பிள்ளைகளின் பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றிற்கு சங்கல்பம் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.