உப்பனாறில் ரூ. 29. 25 கோடியில் மேம்பால பணிகள் துவக்கம்

80பார்த்தது
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் (மத்திய) கோட்டம் சார்பில் புதுவை காமராஜர் சாலை முதல் மறைமலையடிகள் சாலை வரை உள்ள 732 மீட்டர் நீளம் உள்ள உப்பனார் பாலத்தின் மீதம் உள்ள வேலையை முடிப்பதற்கும் காமராஜர் சாலையில் பாலாஜி திரையரங்கம் அருகில் உள்ள பழைய பாலத்தை மறுகட்டமைக்கவும் ரூ. 29. 25 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உருளையன்பேட் சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமி மற்றும் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் பொதுப்பணித் துறை செயலர் முத்தம்மா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி