புதுச்சேரி ஒருங்கிணைந்த
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பாண்டி காபி ஹவுஸ் என்ற புதிய உணவகத்தை தலைமை நீதிபதி சந்திரசேகரன் அவர்கள் திறந்து வைத்தார்.
புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் குமரன், பொதுச் செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் கேன்டீன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.