குழந்தைகள் நல சிகிச்சை மையம் திறப்பு

63பார்த்தது
புதுச்சேரி 45 அடி சாலை ராஜ ராஜேஸ்வரி நகரில் குழந்தைகள் நல மருத்துவர் பிரியாவின் வரம் குழந்தைகள் நல சிகிச்சை மையம் புதிதாக இன்று திறக்கப்பட்டது. இந்த குழந்தைகள் நல சிகிச்சை மையத்தை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி பி ராமலிங்கம் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவர் பிரியா மருத்துவர் விஜய் ஆகியோருக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவர் பிரியா குழந்தைகளுக்கு சிகிச்சையை தொடங்கி அதற்கான ஆலோசனையும் வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சப்தகிரி குழு நிர்வாக இயக்குனரும் லையன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் தலைவருமான விபிஎஸ் ரமேஷ்குமார் மற்றும் தொழில் அதிபர்கள் மருத்துவர்கள் சப்தகிரி குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த மையம் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை ஐந்து முப்பது மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி