ஆன்லைன் வர்த்தகம் எனக்கூறி ரூ. 3 லட்சம் மோசடி

60பார்த்தது
புதுச்சேரி ஜிப்மர் குடியிருப்பை சேர்ந்த ஜான்பால் என்பவரை சில மர்ம நபர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைத்துள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக கூறியுள்ளனர். அதை நம்பிய ஜான்பால் ரூ. 3 5 லட்சத்து 51 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அவரால் முதலீடு செய்த பணத்தைக்கூட திரும்ப்பெற முடியவில்லை. அதன் பின்னரே மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

சேதராப்பட்டை சேர்ந்த சத்யேந்திர சர்மா என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 75 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய் - துள்ளனர். மாகியை சேர்ந்த ஜின்சா அதுல் என்பவர் ஆன்லைன் மூலம் ரூ. 698-க்கு துணிகளை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவ 1. ருக்கு துணியை அனுப்பாமல் மேலும் ரூ. 500 கேட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் 5 விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி