மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அதிமுக சார்பில் மாபெரும் கோலப் போட்டி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நடைபெற்றது. இதனை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அவைத்தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர்.