கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளையின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி பாரதிப் பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் இலட்சுமிநாராயணன், அரசு கொறடா AKD. ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் K. S. P. ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.