புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, சுல்தான்பேட்டை கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்டம் மூலம் ரூ. 10 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் அல்மதினா பள்ளிவாசல் எதிரில் உள்ள வாய்க்கால் தெருவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அந்நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று காலை சுல்தான்பேட்டையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கலந்து கொண்டு, புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் கேன் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் உமாபதி, உதவிப் பொறியாளர் வாசு, இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் மற்றும் தொகுதி திமுக நிர்வாகிகள், ஜமாத்தார்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்