வங்கக் கடலில் உருவான 'பெங்கல்' புயல் நாளை(நவ.30) கரையை கடக்க உள்ள நிலையில் தமிழக மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் கன மழை பெய்யக்கூடும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.