புதுச்சேரி சட்டப்பேரவையில் தேசிய இ-விதான் செயலி (நேவா) தொடக்கவிழா தனியார் உணவகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு தேசிய இ-விதான் செயலியை துவக்கி வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, தலைமை செயலாளர் ஷரத் சவுகான் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.