புதுச்சேரி 45 அடி ரோட்டில் உள்ள காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் எதிரே இரவு நேரத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்துக் கொண்டு வேகமாக தப்பி சென்றனர்.
அப்போது கர்ப்பிணிப் பெண் கணவருடன் சாலையில் தடுமாறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக பெரிய கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.