புதுவையில் உப்பனாறு வாய்க்கால் தூர்வாறும் பணியை MLA ஆய்வு

61பார்த்தது
புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கொசு தொல்லை நிலவி வருகிறது. அதனால் அரசை அணுகி தொகுதியில் தொடர்ச்சியாக மருந்து தெளித்து வருகிறார். அதை போல 6 மாதம் ஒரு முறையாவது பெரிய வாய்க்கால் மற்றும் உப்பனார் வாய்க்கால் தூர் வாரும் பணியையும் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் முழு கவனம் செலுத்தி மேற்கொண்டு வருகிறார். தற்பொழுது புயலால் பாதிக்கப்பட்டு வாய்க்காலில் மரங்கள் சாய்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. ஆதலால் உப்பனார் வாய்க்கால் தூர்வார கோரி பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கோரிக்கை வைத்தார். சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை ஏற்று இன்று வாணரப்பேட்டை சார்ந்த எல்லை அம்மன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் தோப்பு அருகாமையில் இருந்து உப்பனார் வாய்க்கால் முடியும் வரை நீர்ப்பாசன பிரிவ உதவி பொறியாளர் லூயிபிரகாசம் அவர்களுடன் சென்று உப்பனார் வாய்க்காலை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பார்வையிட்டு பின்பு ஹிட்டாச்சி மெஷின் வைத்து வாய்க்காலில் உள்ள சாய்ந்த மரங்கள், பிளாஸ்டிக் குப்பை மண் போன்றவற்றை தூர்வாரும் மிஷின் மூலம் சுமார் ரூ. 10 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி