புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 50 உயர்த்தி வழங்க வேண்டும், 75% மானிய விலையில் மாட்டுத்தீவனம் ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.