புதுச்சேரி காவல்துறை மற்றும் பி. என். ஐ ( BNi Business Network International ) இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு மரத்தான் போட்டியை புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று காலை நடத்தினர். இந்த விழிப்புணர்வு மரத்தான் போட்டியை புதுச்சேரி காவல்துறை எஸ். பி. , நாரா சைதன்யா மற்றும் எஸ். பி. , லட்சுமி சௌஜன்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுச்சேரியில் தொழில் முனைவோர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மரத்தான் போட்டி புதுச்சேரி காந்தி சிலையில் தொடங்கி எஸ் வி பட்டேல் சாலை காந்தி வீதி வழியாக மீண்டும் கடற்கரை சாலைக்கு வந்தனர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு நடனமாடி போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.