திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் பரிசுகள் வழங்கி பாராட்டினார் மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அனைத்து பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.