புதுவை வில்லியனூர் அருகே உள்ள அரியூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரதுய மனைவி கோவிந்தம்மாள் (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் புதுவை காவல் துறையில் போலீஸ்பணிக்கு தேர்வாகி பயிற்சி பெற்று வருகிறார்.
கோவிந்தம்மாள் ஜிப்மரில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக
வேலை செய்து வந்தார். கடந்த 10-ந் தேதி இரவு கோவிந்தம்மாள் பணி முடிந்து அரியூர் பஸ்ஸ்டாப்பில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் கோவிந்தம்மாளின் பின்பக்க தலையில் இரும்பு ராடால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தம்மாள் சிறிது நேரத்தில் இறந்தார். இதில் கோவிந்தம்மாள் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பஞ்சமூர்த்தி(32) என்பவர் மாயமானது தெரியவந்தது. அவருக்கும், கோவிந்தம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. முன்விரோதத்தில் கோவிந்தம்மாளை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பண்ருட்டியில் பதுங்கியிருந்த பஞ்சமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பஞ்சமூர்த்தி போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.