பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பாக அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி, காமராஜ் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், நேரு (எ) குப்புசாமி, பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன், பிரகாஷ் குமார் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.