கள்ளச்சாராய பலி குறித்து நீதி விசாரணை

268பார்த்தது
கள்ளச்சாராய பலி குறித்து நீதி விசாரணை
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசு, பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சாராயத்தை ஒழிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் மெத்தனால் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுவை அரசு விசாரணை நடத்த வேண்டும். கள்ளச்சாராய பலி குறித்து முழுமையான ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி